Monday, March 27, 2023

தாம்பூலம் பயன்கள்


🤔 வெற்றிலை-பாக்கிற்கு நம் முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்தது ஏன்?🍃

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே!.

தமிழர்களின் பாரம்பரியத்தில் வாழ்க்கையை நெறிப்படுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாமல் உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கிறது. அந்த வகையில் தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது என்பது பற்றி நிறைய பேருக்கு தெரியாது. இப்பொழுது அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே!.. என்று கூறுவதன் காரணத்தை பார்ப்போம்.

பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் எப்படி வருகிறது என்றால் உடம்பில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ அல்லது குறையும் போதோ நோய் வருகிறது என்று சொல்கிறார்கள்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான விகிதத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது என்றே கூறலாம். 

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை சரிசெய்யக்கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். 

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று நோய்களையும் குணப்படுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. 

இப்போது வயதானவர்களுக்கு இருக்கக்கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். ஆனால் அந்த காலத்தில் இருந்த முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே.

ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் அதிகமாகாமல் பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது உணவில் உள்ள வாதத்தை, அதாவது வாயுவை கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துக்கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது. இந்த முறையில் வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு எடுத்துக்கொண்டால் எந்தவித நோயும் இல்லாமல் வாழலாம் என்பது நம் முன்னோர்களால் வகுக்கப்பட்ட தாம்பூலம் என்ற பண்பாட்டுப் பெருமை ஆகும்.

Wednesday, July 27, 2011

garmets stock and surplus

Hello
We Jaya internationals are dealing in knit and woven garments stock and surplus for all age groups covering all seasons from Tiruppur.Tamil nadu .INDIA.